எழுச்சிக்குரல்

உடல்களு முள்ளங்களும் சிதற,
துடிதுடித் தெம்மக்களுங் கதற,
இக்கரையி லுறங்கினேன் நான்.
தன்சூரியனை யிழந்த தவ்வான்.”அக்கறையி லின்று, இக்கரையி லென்று?”,
எனவொலித்த தென்னெஞ்சில் குரலொன்று.
மனசிம்மாசன மிடிய நான் விழுந்தேன்,
தன்மான மிழந்து நான் அழுதேன்.

தேவை, இதோமாவீரர்கள் அல்ல,
நம்மக்க ளிப்புரட்சிகளை வெல்ல –
நான், நீ, வானெட்டும் நமது குரல்,
அக்குரலோ டிணைந்த நம் செயல்.

விழுந்திடு, விழுந்தும் தலைநிமிர்ந்து நீயெழுந்திடு!
குரல்கொடு – திரைகள் கிழியட்டும், முழங்கிடு!
புறப்படு – பலசூரியன்க ளுதிக்கட்டும், செயல்படு!
எரிந்திடு – தமிழ்தீயா லுருகி நீயெரிந்திடு!

— ம. விசய் தானியேல்